
இலங்கையில்
மதங்களுக்கிடையே மோதல்களை ஏற்படுத்தும் திட்டத்தை பங்காளிக்கட்சியான ஜாதிக
ஹெல உறுமயவை பயன்படுத்தி அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது என்று ஐக்கிய
தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன்
கிரியெல்ல குற்றஞ்சாட்டியுள்ளார்.சிறுபான்மை இனத்தை தலைதூக்க விடமாட்டோம் என்ற
மாயையை சிங்கள பெளத்தர்கள் மத்தியில் ஏற்படுத்தி அரசின் அனைத்து
குற்றங்களும் மறைக்கப்படுகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார். நாட்டில்
தற்போது தலைதூக்கியுள்ள மத முரண்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவித்த போதே
அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.-
வீரகேசரி
0 Comments