Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

எகிப்து உத்தேச அரசியல் யாப்புக்கு வெற்றி

எகிப்தில் உத்தேச அரசியல் யாப்பு மீதான வாக்கெடுப்பில் உத்தேச யாப்புக்கு ஆதரவாக 64 வீதமான வாக்குகள் கிடைத்துள்ளதாக இஹ்வானுல் முஸ்லிமீன் தேர்தல் கண்காணிப்பு பிரிவு அறிவித்துள்ளது. அதேவேளை உத்தேச யாப்புக்கு எதிராக 34 வாக்குகளே கிடைத்துள்ளது என்று அது தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் 22 சனிக்கிழமை இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு
இடம்பெற்றது.
எகிப்தில் உத்தேச அரசியல் யாப்பு வரைபின் மீதான முதல் கட்ட வாக்கெடுப்பில் 15 ஆம் திகதி உத்தேச யாப்புக்கு ஆதரவாக 57 வீதமான வாக்குகள் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை வாக்கெடுப்பின் உத்தியோகபூர்வ முடிவுகள் இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் உத்தேச யாப்பை எதிர்த்து வாக்களிக்குமாறு எதிர்கட்சிகள் பிரசாரம் மேற்கொண்டது. அதேவேளை உத்தேச யாப்பை ஆதரித்து வாக்களிக்குமாறு ஆளும் தரப்பு பிரசாரம் மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments