Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

சீரற்ற காலநிலை நீங்க பிரார்த்திக்குக: உலமா சபை

தற்சமயம் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை நீங்கி மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கான பிரார்த்தனை புரியுமாறு சகல முஸ்லிம்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது.
அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன, மத வேறுபாடின்றி உதவிகளை வழங்குமாறும் உலமா
சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியும் சில பகுதிகள் மண் சரிவில் சிக்குண்டும் உள்ளன. கிழக்கில் வீசிய காற்றும் பூமியதிர்வுகளும் மக்களை பீதி கொள்ளச் செய்துள்ளன. இதன் காரணமாக அப் பிரதேச மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தகைய மக்களுக்கு கைகொடுத்து உதவுவது ஏனையோர் மீதுள்ள கடமையாகும்.
அதுமட்டுமன்றி அதிகமதிகம் இஸ்திஃபாரும் தௌபாவும் செய்து அல்லாஹ்வின் அருளை கேட்குமாறும் மக்கள் வேண்டிக் கொள்ளப்படுகின்றனர்.
அனர்த்தத்தில் சிக்குண்டுள்ள மக்களுக்கு சாதி, மத, இன வேறுபாடின்றி தம்மாலான உதவிகளை செய்ய முன்வருமாறு, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள் விடுக்கிறது.
சகல பீதிகளும் நீங்கி நிம்மதியோடு வாழ சகலருக்கும் அருள் புரிய வேண்டுமென அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறும் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Post a Comment

0 Comments