நேற்றிரவு முதல் பெய்துவரும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதாக
கண்டி மாவட்ட செயலாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
அக்குரணை நகரில் இன்று முற்பகல் சுமார் ஐந்து அடி உயரத்திற்கு வெள்ளம் தேங்கி நின்றதாகவும் தற்போது வெள்ளம் வடிந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் அம்பதென்னயிலிருந்து அக்குரணை வரையான வீதியூடான வாகன போக்குவரத்தும் முற்றாக தடைப்பட்டுள்ளது.
0 Comments