Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

அல்குர் ஆணை மனப்பாடம் செய்யாத தன் மகனை அடித்தே கொன்ற தாய்!

 பிரிட்டனை சேர்ந்த இந்திய பெண் ஒருவர்,அல்குர் ஆணை மனப்பாடம் செய்யாத தன் மகனை அடித்தே கொன்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் ஐதராபாதை சேர்ந்த யூசுப், சாரா ஈஜ் தம்பதியினர் பிரிட்டனில் வசித்து வருகின்றார். இவர்களின் மகன் யாசினை குர் ஆன் கற்கச் சொல்லி இருவரும் அறிவுறுத்தியுள்ளனர். 
 குர் ஆணை மனப்பாடம் செய்ய இயாலாமல் தவித்த யாசின் மீது கோபமடைந்த சாரா, மகனை தொடர்ந்து அடித்து துன்புறுத்தியுள்ளார். இந்த நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு, சாரா அடித்ததில் யாசின் இறந்து இருக்கிறார். பிறகு குற்றத்தை மறைக்க யாசின் உடலை எண்ணை ஊற்றி எரித்து புதைத்து இருக்கிறார்.

இந்த செய்தி காவல் துறையினருக்கு தெரியவர சாரா மீது வழக்கு தொடரப்பட்டது. சாராவுக்கு எதிராக அவரது கணவன் இந்த வழக்கில் சாட்சியம் அளித்துள்ளார்.

கோபம் தாங்காமல் குச்சியால் யாசினை முதுகில் ஒரு நாயை அடிப்பது போன்று அடித்து கொன்றதாகவும், அதில் யாசின் இறந்துவிட்டதாகவும் அவர் குற்றத்தை ஒப்புகொண்டுள்ளார்.

இதனை அடுத்து சாரா குற்றாவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
 
 
 
-deranea-

Post a Comment

0 Comments