இலங்கையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழையின் காரணமாக
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. இன்னும்
ஆயிரக்கணக்கானவர்கள் அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள முகாம்களில்
தங்கியுள்ளனர்.
வடக்கே மழை தொடருவதால் மக்கள் பெருமளவுக்கு சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியாப் பகுதியில் மட்டும் ஆயிரக்கணக்கானவர்கள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார். மழையின் காரணமாக வீடுகளில் நீர் புகுந்ததால் வீட்டை விட்டு வெளியேறியவர்கள் பாடசாலைகள் மற்றும் ஆலயங்களின் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வட பகுதியில் பல இடங்களில் மழையின் காரணமாக போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் மாவட்டத்தில் இருந்து மன்னார் மாவட்டத்தின் ஊடாகச் செல்லும் அருவியாறு பெருக்கெடுததிருப்பதனால், குஞ்சுக்குளம் கிராமம் போக்குவரத்தின்றி துண்டிக்கப்பட்டுள்ளது.
அருவியரற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்திருப்பதனால், தம்பனைக்குளத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதுகாப்புக்காக மடு பிரதேசத்தில் உள்ள சின்னபண்டிவிரிச்சான் பாடசாலையில் அதிகாரிகளினால் தங்க வைக்கப்பட்டிருக்கினற்னர்.
கிழக்கு மாகாணத்தில் மழை சற்று குறைந்து வெள்ளம் வடிந்து வந்தாலும், மக்களின் வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.
அங்கு இன்னும் பலர், தொடர்ந்து முகாம்களில் தங்கியிருக்க வேண்டிய சூழல் உள்ளது என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.
முகாம்களில் தங்கியுள்ளவர்கள் சமைத்த உணவு தவிர வேறு எந்த நிவாரணமும் அரசால் வழங்கபப்டவில்லை என்று மக்கள் கூறுகின்றனர்.
இதுவரை அரச தரப்பில் அமைச்சர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ தங்களை பார்வையிட வரவில்லை என்று முகாம்வாசிகள் தெரிவித்தனர்.
எனினும் இராணுவத்தினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு பலரை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்ததாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
இரு ஆண்டுகளுக்கு முன்னர் இதே போன்று ஒரு நிலை ஏற்பட்ட போது பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட இன்னும் முழுமையான நிவாரணங்கள் கிடைக்கவில்லை எனவும் பலர் சுட்டிக்காட்டுகிறார்கள்.-bbc-

0 Comments