
அதேவேளை இன்று இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை
காஸாவின் 30 இடங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இன்று இடம்பெற்ற விமான
தாக்குதலுடன் பலஸ்தீனில் கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆக
உயர்ந்துள்ளது.என்று செய்திகள் தெரிவிக்கிறது . காயப்பட்டவர்களின்
எண்ணிக்கை 250 தையும் கடந்துள்ளது .
இஸ்ரேலிய யுத்த அமைச்சு தாம் காஸாவின் 600
இலக்குகளை தாக்கியுள்ளதாக அறிவித்துள்ளதுடன், காஸாவில் இருந்து 550
ரொகெட்டுக்கள் ஏவப்பட்டதாகவும் அதில் 184 ரொகெட்டுக்களை தமது ‘இரும்பு
அரண்’ -ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பு தடுத்து விட்டதாகவும்
தெரிவித்துள்ளது.
இன்று பல நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிராகவும்
முஸ்லிம் நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக தீர்க்கமான முடிவுகளை எடுக்குமாறும்
கோரி ஆர்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளது. எகிப்து,துனிசியா, ஜோர்டான், ஈரான்
போன்ற நாடுகளை ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளது. ஜோர்டானில் இஸ்ரேலுக்கு
எதிரான ஆர்ப்பாட்டம் அதன் மன்னருக்கு எதிராகவும் மாறியுள்ளது.
காஸா போராளிகளின் ரொக்கெட் தாக்குதல்கள்
தொடர்ந்து இடம்பெற்றுவருகிறது. முதல் முறையாக ஜெருசலத்தை இன்று
ரொக்கெட்டுக்கள் தாக்கியுள்ளது. அதேவேளை நேற்றும் இன்றும் டெல் அவியையும்
ரொக்கெட்டுக்கள் தாக்கியமை குறிப்பிடத்தக்கது.
0 Comments