Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

'படையினர் தாக்கி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் காயம்'..

யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மாவீரர் தினம் அனுஸ்டிப்பதைத் தடுக்கும் வகையில் செவ்வாயன்று மாலை இராணுவத்தினர் பல்கலைக்கழக மாணவர் விடுதிகளுக்குள் சென்று அடித்து நொறுக்கியதைக் கண்டிப்பதற்காக புதனன்று ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்கள் மீது படையினர் தாக்குதல் நடத்தியதில் நான்கு மாணவர்கள் காயமடைந்து யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இரு மாணவிகள் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் 5 மாணவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்.

இந்தச் சம்பவம் பற்றி அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தனது வாகனக் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்திற்கு தான் சென்றபோது, நூற்றுக்கணக்கான பொலிசாரும், இராணுவத்தினரும் காணப்பட்டதாகவும், மாணவர்கள் வீதியில் அனுமியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சித்ததைத் தடுப்பதற்காகவே தாங்கள் வந்ததாகவும் அப்போது மாணவர்களுக்கும் தங்களுக்குமிடையில் கைகலப்பு ஏற்பட்டதாகவும் பொலிசார் தன்னிடம் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் கூறினார்.

மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதையும். தனது வாகனக் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதையும் கண்டித்த தனக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு முறுகல் நிலை தோன்றியதாகவும், இதனையடுத்து பொலிசார் தன்னைப் பாதுகாப்பாக அனுப்பி வைத்ததாகவும் சவரணபவன் தெரிவித்தார்.



-BBC-

Post a Comment

0 Comments