Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

சிவப்பு மழையில் குறைந்தளவு இரும்பு படிமமே உள்ளது

சிவப்பு மழையில் குறைந்தளவு இரும்பு படிமமே உள்ளது

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் பெய்த சிவப்பு மழை நீரினை பரிசோதனை செய்து பார்த்த போது அதில் இரும்பு படிமம் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கின்றமை தெரியவந்துள்ளது. சாதாரணமாக பெய்யும் மழை நீரில் இரும்பு படிமம் இருப்பதில்லை. எனினும் அசாதாரண வகையில் பெய்த சிவப்பு மழை நீரில் ஒரு லீற்றரில் 4 வீத இரும்பு படிமமே இருந்ததாக இரசாயனவியல் பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எப்படியிருப்பினும் இந்நீரில் குறிப்பிட்டளவு இரும்பு படிமம் எவ்வாறு சேர்ந்தது தொடர்பான பரிசோதனையை தொடர்வதற்காக சேகரிக்கப்பட்ட சிவப்பு மழை நீரை உயர் தொழிநுட்பவியல் நிறுவனத்திற்கு இன்று (20) அனுப்பவுள்ளதாக மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் டாக்டர் அணில் சமரநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் நடவடிக்கை எடுப்பதற்காக வைத்தியர்கள் ஆறு பேர் அடங்கிய குழு ஒன்றை சிவப்பு மழை பெய்த பிரதேசங்களிற்கு அனுப்பி வைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக செவனகல, மனப்பிட்டிய, ஹிங்குரக்கொட ஆகிய பிரதேசங்களில் சிவப்பு மழை பெய்தது.

Post a Comment

0 Comments