Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

இலங்கையில் பாலியல் தொழில்: ஷர்மிளா கருத்துக்களால் சர்ச்சை


ஏறாவூரில் முஸ்லிம்களின் கூட்டம்
இலங்கையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குதல் அத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் மற்றும் பாதுகாப்பு பெற உதவும் என ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆய்வாளரான செய்யத் ஷர்மிளா வெளியிட்ட கருத்து முஸ்லிம்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விபச்சாரத்தை நாடுவதோ,
விபச்சாரம் இடம்பெறுவதை அங்கீகரிப்பதோ இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட விஷயம் என கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்புகள் அவரது இந்த கருத்து தொடரபாக கண்டணங்களை வெளியிட்டுள்ளன.
புதன் கிழமை(21.11.12) மாலை ஏறாவூர் பிரதேச பள்ளிவாசல்கள் சம்மேளனம், ஷ்ர்மிளா செய்யத வெளியிட்ட இந்த கருத்துக்கள் குறித்து கூடி ஆராய்ந்து அவரிடம் விளக்கம் கோருவது என தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக தமிழோசையிடம் பேசிய சம்மேளனத்தின் தலைவர் அப்துல் லத்தீஃப், ஷர்மிளா தெரிவித்த கருத்துக்கள் குறித்து அவரை நேரடியாக சந்தித்து உண்மை நிலையை அறிய விளக்கம் கோர மார்க்க அறிஞர்கள், கல்விமான்கள் உட்பட 5 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்றார்.
எனினும் அவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முடியாததால், அவரது பெற்றோரை சந்தித்து தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியில் சம்மேளம் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும் லத்தீஃப் தெரிவித்தார்.
பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குதல் தொடர்பாக அவர் வெளியிட்ட கருத்திலிருந்து முடிந்த வரை அவரை விடுவிப்பதற்கான நடவடிக்கை மூலம், இந்தப் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வை காண்பதே தமது நோக்கம் என்றும் அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.
 
 
 
-BBC-

Post a Comment

0 Comments