இலங்கையின்
முதலாவது தொலைத்தொடர்பு இலங்கை செய்மதியான சுப்ரிம் செட் சற்றுமுன்னர்
விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது. சீனாவினால் தயாரிக்கப்பட்ட செய்மதி சினாவின்
ஏவு தளத்தில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது.படங்கள்
இதன்
மூலம் உலகில் சொந்தமாக தொலைத்தொடர்பு செய்மதியை வைத்திருக்கும் 45ஆவது
நாடாக இலங்கை இடம்பிடித்துள்ளதுடன்
தெற்காசியாவிலேயே இந்தியா,
பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக சொந்தமாக தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை
வைத்துள்ள மூன்றாவது நாடு என்ற பெருமையையும் இலங்கை பெற்றுள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகிறது
இந்த
செயற்கைக்கோளை கட்டுப்படுத்துவதற்கான நிலையம் கண்டியில்
அமைக்கப்படவுள்ளது. சுமார் 360 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில்
உருவாக்கப்பட்டுள்ள இச்செய்மதி, எதிர்வரும் 2013ஆம் ஆண்டு ஜுன்
மாதத்திற்குப் பின்னர் வர்த்தக நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளது.
0 Comments