Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

கம்பஹாவில் கழிவுத் தேயிலை கடத்தல்...


கம்பஹா பகுதியில் நீண்டகாலமாக இயங்கிவந்த பாரியளவிலான கழிவுத் தேயிலை கடத்தல் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கம்பஹா-பெம்முல்ல பகுதியிலேயே இந்த சட்டவிரோத நடவடிக்கை குறித்து தகவல்கள் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அந்த பகுதியில் நேற்று மேற்கொண்ட தேடுதலின்போது 50 ஆயிரம் கிலோகிராம் கழிவுத் தேயிலையைக் கைப்பற்றியுள்ளனர்.
கொள்கலன் ஒன்றிற்குள் கழிவுத் தேயிலை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கை குறித்து பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

-News1st-

Post a Comment

0 Comments