Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

வெலிக்கடை சம்பவத்தை தொடர்ந்து கொழும்பின் பல பகுதிகளிலும் பொலிஸார் திடீர் சோதனை...

 தலைநகர் கொழும்பின் வெலிக்கடை சிறைசாலையில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும், கைதிகளுக்கும் இடையில் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தையடுத்து ஏற்பட்ட பதற்றம் சற்று தணிந்துள்ள நிலையில், நகரின் பல பகுதிகளில் பொலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதை காணமுடிந்தது.
பொரல்ல, மருதானை, பேலியாகொட, கொள்ளுபிட்டி பகுதிகளில்
பொலீஸார் திடீர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். முச்சக்கர வண்டி மற்றும் ஏனைய வாகனங்கள் நிறுத்தப்பட்டு சோதனைகள் நடைபெறுகின்றன.

சிறைக் கைதிகள் பலர் தப்பியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்தே இந்த சோதனை முன்னெடுக்கப்படுவதாக பொலீஸார் தெரிவித்தனர்.
அதே வேளை, வெலிக்கடை சம்பவத்தில் காயமுற்றவர்கள் கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பலரின் நிலை கவலைக்கிடமாகியுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் சற்று முன்னர் தெரிவித்தார்.

 -கொழும்பிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா-
 

Post a Comment

0 Comments