Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

மின்னல் தாக்கம் காரணமாக 47 பேர் மரணம்...

 
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாட்டின் பல பாகங்களிலும் மின்னல் தாக்குதலின் காரணமாக 47 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏப்ரல் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் மின்னல் தாக்குதல் காரணமாக அதிகளவான உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் மட்டும் மின்னல் தாக்கம் காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒக்டோபர் மாதத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குள் 20 பேர் மின்னல் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளதுடன், கடந்த வருட ஒக்டோபர் மாத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

0 Comments