Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

மியான்மரில் நிலநடுக்கம்:13 பேர் பலி; 50 பேர் காயம்; புத்த மடாலயங்களுக்கும் சேதம்..

மியான்மர் நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தில், 13 பேர் பலியாகினர்; ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். மியான்மர் நாட்டின் சின்ட்கு என்ற நகரை மையமாகக் கொண்டு, நேற்று முன்தினம் 6.8 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது.
இதனால், மியான்மர் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மண்டாலே பகுதியில் ஏராளமான வீடுகளும், புத்த மடாலயங்களும் இடிந்து விழுந்தன.
இந்த சம்பவங்களில், 13 பேர் பலியாகியுள்ளனர்; 50க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
சின்ட்கு பகுதியில், தங்கச் சுரங்கம் சேதமடைந்தது. இந்த சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் பலர் காயமடைந்தனர். ஷ்விபூ என்ற இடத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்தது. மொகாக் என்ற இடத்தில் புத்த மடாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள், பூகம்பத்தால் சேதமடைந்தன.

Post a Comment

0 Comments