கடந்த 19.10.2012 வெள்ளிக் கிழமையன்று துறைமுகத்தில் ஜி.ஸி.டி. கேம்ப்பில் “ஹஜ்” பற்றிய சிறப்பு நிகழ்ச்சி துறைமுக அழைப்பகம் (உர்து மொழியில்) ஏற்பாடு செய்திருந்தது. அது சமயம் துறைமுகத்தில் அல்ஹிலால் (கண்டைனர் டெர்மினல்) கம்பெனியில் பணிபுரியும் பிஃலிப்பைன் நாட்டு சகோதரர்கள் இருவர் இஸ்லாத்தை ஏற்றனர். (அல்ஹம்துலில்லாஹ்)
அமெரிக்கர்கள் நபிகள் நாயகத்தின் கண்ணியத்தை குறைக்கும் விதமாக தயாரித்த திரைப்படத்திற்குப் பிறகுதான் இந்த இருவரும் இஸ்லாத்தைப் படிக்கத் துவங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஒருவருக்கு அல்லாஹ்வின் தூதருடைய பெயரை அவருக்கு வைக்கவேண்டி “முஹம்மத்” என்று மாற்றிக் கொண்டார்.
மற்றொருவர் மரத்தடி நிழலிலும் படுத்துறங்கி ஆட்சி செய்த மாபெரும் சக்கரவர்த்தி உமர் (ரழி) அவர்களின் பெயரை தனக்கு வைத்துக் கொள்ளுமாறுவேண்டி “தனது பெயரை “உமர்” என்று மாற்றிக்கொண்டார். அந்த இரண்டு சகோதரர்களும் கடைசிவரை இஸ்லாத்தில் நிலைத்து இருப்பதற்கு தாங்களும் பிரார்த்திக்கவும்.
0 Comments