Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

செவ்வாய் கிரகத்தில் ஒளிரும் பொருள் கண்டுபிடிப்பு: தொடர்ந்து ஆய்வு...


உயிரினங்கள் வாழமுடியுமா என ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்துக்கு கியூரியாசிட்டி என்ற ஆய்வுக்கூட விண்கலத்தை அனுப்பியுள்ளது.
2 ஆண்டுகள் அங்கு தங்கி ஆய்வு மேற்கொள்ள இருக்கும் அந்த விண்கலம் தற்போது பல அரிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. பாறையை வெட்டி எடுத்து புகைப்படங்களை அனுப்பியது. மற்றும் செவ்வாய் கிரகத்தின் தோற்றத்தை பல கோணங்களில் படம் எடுத்து அனுப்பி வருகிறது.
இந்த நிலையில், கியூரியாசிட்டி விண்கலம் கடந்த 8ம் திகதி எடுத்து அனுப்பிய புகைப்படத்தில்
செவ்வாய் கிரக மண்ணில் ஒரு ஒளிரும் பொருள் உள்ளது. அது என்னவாக இருக்கும் என விவாதம் தற்போது நடந்து வருகிறது. இது விண்கலத்தில் இருந்து கழன்று விழுந்த அதன் ஒரு பாகமாக இருக்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் ஆய்வு செய்தபோது கியூரியாசிட்டியின் 7 அடி நீளமுள்ள ரோபோட் கரங்களின் வெளிச்சம் மண்ணில் விழுந்திருக்கலாம். அதன் நிழல் ஒளிரும் அதிசய பொருள் போன்று தெரிகிறது என்று மற்றொரு தரப்பினரும் கூறுகின்றனர்.
எது எப்படியிருப்பினும் அதுகுறித்த தீவிர ஆய்வு நடைபெற்று வருவதாக கியூரியாசிட்டி விண்கலத்தின் ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments