Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

முடங்கிப் போயிருந்த இலங்கையின் உயர் கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்...


நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மேற்கொண்டு வந்த பணி பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டுள்ள நிலையில் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் இன்று (15) மீண்டும் திறக்கப்படுகின்றன.

சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக விரிவுரையளர்கள் ஆரம்பித்திருந்த பணி பகிஸ்கரிப்பு போராட்டம் கடந்த வியாழக்கிழமையுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில் விரிவுரையாளர்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தமது பணிகளை ஆரம்பித்ததாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் தெரிவித்தது.

விரிவுரையாளர்களது பணி பகிஸ்கரிப்பின் காரணமாக கடந்த மூன்று மாத காலப் பகுதிக்கும் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்த உயர் கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி களனி, ஜயவர்தனபுர, பேராதனை ஆகிய பல்கலைக்கழகங்களின் அனைத்து பீடங்களும் இன்று ஆரம்பமாகின்றன.

யாழ். பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறக்கப்படினும், பிற மாவட்டங்களிலுள்ள மாணவர்கள் அனைவரும் விருதிகளுக்கு திரும்பாத காரணத்தினால் இப் பல்கலைக்கழகங்களின் அனைத்து பீட கல்வி நடவடிக்கைகளும் இன்று ஆரம்பிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது

Post a Comment

0 Comments