இலங்கை கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து இந்திய கல்வியலாளர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.
இலங்கை கல்வித் துறை சிக்கல் குறித்து இந்திய கல்வியலாளர்கள் 22 பேர் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
கல்விக்காக இலங்கை அரசு மொத்த தேசிய உற்பத்தியில் 1.86% ஒதுக்குவதாக அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது இலங்கை கல்வித் துறைக்கு போதுமானதல்ல என்பதால் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதென அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இப்பிரச்சினை குறித்து அதிக கவனம் செலுத்தியுள்ளதாகவும் இலங்கை விரிவுரையாளர்களுக்கு தமது ஆதரவை வழங்குவதாகவும் இந்திய கல்வியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
0 Comments