Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

கண்டி மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை...

மலையகத்தில் ஏற்பட்டுள்ள கடும் மழை காரணமாக கண்டி மாவட்டத்தின் பல பிரதேச செயலக பிரிவுகளில் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் நிரைவேற்று அதிகாரி ஆர்.எம்.எஸ்.பண்டார தெரிவிக்கையில்,
கண்டி மாவட்டத்தின் கங்கஇஹல கோரலய, உடுறுவர யட்டிநுவர, ஹாரிஸ்பத்துவ, பூஜாபிட்டிய, அக்குறணை, கலகெதர, ஹத்தரலியத்த ஆகிய பிரதேச செயலக பிரிவுகள் மண் சரிவு அபாயத்தை எதிர் நோக்கியுள்ளதாக கூறினார்.
அப் பிரதேசங்களில் சந்தேகத்திற்குரிய இடங்களில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments