Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

திவிநெகுமவிற்கு எதிராக மற்றுமொரு மனு தாக்கல்..

திவிநெகும சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் மற்றுமொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் சங்க செயலாளர் சாமர மத்துமகளுகேவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் இவர் திவிநெகும சட்டமூலத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்தார்.

மீண்டும் திவிநெகும சட்டமூலம் குறித்து ஆராயுமாறு அவர் இரண்டாவது மனுவில் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் சமர்பித்த மனுவை விசாரித்த நீதிமன்றம் திவிநெகும சட்டமூலத்திற்கு அனைத்து மாகாண சபைகளிலும் அனுமதி பெற வேண்டும் என உத்தரவிட்டது.

வட மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில் சட்டமூலத்தில் உள்ள ஏனைய விடயங்கள் குறித்து கவனம் செலுத்துமாறு மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சட்டமூலம் அரசியல் யாப்புக்கு முரணானது எனவும் பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமல் அதனை நிறைவேற்ற முடியாது என உத்தரவிடும்படி சாமர மத்துமகளுகே தனது இரண்டாவது மனுவில் கோரியுள்ளார்

Post a Comment

0 Comments