Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

இலங்கை மக்களிடம் தொழிநுட்ப அறிவு குறைவு: சுட்டிக்காட்டியுள்ளது ஐ.நா அறிக்கை...

உலகப் பொருளாதார சவால்களை எதிர்நோக்கும் அளவில் இலங்கையர்களின் தொழில்நுட்ப அறிவு விருத்தியடையவில்லை என ஐக்கிய நாடுகள் அமைப்பின் அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.
உலக வங்கியின் பொருளாதார அறிவு சுட்டெண் தரவரிசையில் 2000 ஆம் ஆண்டில் 87ம் இடத்தை வகித்து வந்த இலங்கை, தற்போது 101ம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளதை அவ் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால் மக்களிடையே தொழில்
நுட்ப அறிவு குறைவடைந்துள்ளதாகவும் இவ்வாறு குறைவடைவதற்கு காரணம் இலங்கைப் பல்கலைக்கழக முறைமை தொழில்சார் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அமையவில்லை எனவும் அது குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக உலக தரத்திலான தொழில் வாய்ப்புக்களுக்காக போட்டியிடக் கூடிய வகையில் பல்கலைக்கழக கல்வி முறைமை அமையவில்லை என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.- தகவல் உதயன்

Post a Comment

0 Comments