"டிவி'
பார்ப்பதில் செலவிடப்படும், ஒவ்வொரு மணி நேரமும், மனித ஆயுளில், 22
நிமிடங்களை குறைப்பதாக, ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து உள்ளனர்.
அவுஸ்திரேலிய,
நீரிழிவு ஆராய்ச்சி நிபுணர்கள், வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில்
கூறியிருப்பதாவது: ஒரு நாளுக்கு, ஆறு மணி நேரம், "டிவி' பார்க்கும் பழக்கம்
உடையவர்களையும், "டிவி' பார்க்கும் பழக்கம் இல்லாதவர்களையும், ஒப்பிட்டு
பார்த்து, நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், 25 வயதை தாண்டியவர்கள், ஒரு மணி
நேரம், "டிவி' பார்த்தால், அவர்கள் ஆயுளில், 22 நிமிடங்கள் குறைவது தெரிய
வந்தது. அதிக உடலுழைப்பு இல்லாமல் இருத்தல், புகைபிடித்தல், அதிக பருமனாக
இருத்தல் பட்டியலில், அதிகம், "டிவி' பார்க்கும் பழக்கமும், உயிருக்கு
ஆபத்தை விளைவிக்கும் என, இந்த ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டு உள்ளது.
இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
0 Comments