மின் கட்டண உயர்வு குறித்து இலங்கை மின்சார சபை எவ்வித கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை என பொதுசன பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி ஜயதிஸ்ஸ டி கொஸ்தா தெரிவித்துள்ளார்.
வரவு - செலவுத் திட்டத்திற்கு முன்னர் அரசாங்கம் மின் மற்றும் எரிபொருள் கட்டணங்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் எரிபொருள் விலையை அதிகரிக்கவும் எவ்வித திட்டமும் இல்லை என இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் சுசந்த சில்வா தெரிவித்தார்.
எனினும் உலக வங்கியில் மசகெண்ணையின் விலை அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
0 Comments