அமெரிக்காவின்
வஷிங்டன் மாநிலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பள்ளிவாசல் ஒன்று முற்றிலும்
எரிந்து நாசமாகியுள்ளது. இத்தீ விபத்தில் சீக்கிய கோவில் ஒன்றும்
எரிந்துள்ளது.
கடந்த 4 வருடங்களாக இப்பள்ளிவாசலின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை
(12.10.2012) அதிகாலை 2.30 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனே தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தும், அவர்கள் வருவதற்குள் தீ பரவி முழுக்கட்டிடமும் எரிந்து தரைமட்டமாகியுள்ளது.
மேலும்
பழைய இடத்தில் செயல்பட்டு வந்த குருத்துவாரா பள்ளிவாசலை எதிர்வரும்
டிசம்பர் மாதம் இந்த புதிய கட்டிடத்திற்கு மாற்ற முடிவு
செய்திருந்துள்ளனர். ஆனால் இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக
கூறப்படுகிறது.
அதேநேரம் இப்பகுதியில் சில சீக்கிய குடும்பங்களும் குடியேறியுள்ளனர்.
எனவே இந்தத் தீ விபத்தின் பின்னணியில் ஏதாவது சதிகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது, இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது
0 Comments