Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

நாட்டை சீர்குலைக்கும் திட்டத்தில் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் - ஜனாதிபதி..

தெங்கு செய்கையை வீணாக்கும் மைடா கிருமிநாசினி போன்று சமூகத்தை சீரழிக்க பல சக்திகள் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சில அரச சார்பற்ற நிறுனங்கள் சமூகத்தை சீர்குலைக்கும் நோக்கில் செயற்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச தேங்காய் தினத்தை கொண்டாடும் முகமாக அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

அனைத்து சவால்களையும் வெற்றிகொண்டு சமூகத்தை முன்னோக்கி அழைத்துச் செல்ல வேண்டியது அரசாங்கத்திடம் உள்ள மிகப்பெரிய சவால் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments