Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

கொழும்புக்கு ஆடுகளை ஏற்றிவந்த வான் கொட்டகலையில் மடக்கிப்பிடிப்பு


தலவாக்கலையிலிருந்து கொழும்புக்கு சட்டவிரோதமாக ஆடுகளைக் கொண்டு சென்ற வான் ஒன்றினை பத்தனை பொலிஸார் கொட்டகலை நகரில் வைத்து நேற்றிரவு கைப்பற்றியுள்ளனர்.

நேற்றிரவு கொட்டகலை நகரில் ரோந்து சென்ற பத்தனை பொலிஸார் சந்தேகத்துக்கிடமான வகையில் தலவாக்கலைப் பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற வான் ஒன்றை வழிமறித்து சோதனையிட்ட போது அந்த வானின் உள்ளே 28 ஆடுகள் இருந்துள்ளன.

இந்த ஆடுகளைக் கொண்டு செல்வதற்கான அனுமதி பத்திரம் இல்லாத காரணத்தினால் வானின் சாரதியையும் உதவியாளரையும் விசாரணக்கு உட்படுத்திய பொலிஸார் ஆடுகளையும் வானையும் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர்களையும் ஆடுகள் மற்றும் வானையும் ஹட்டன் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தவதற்கு பத்தனை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments