Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

டிசம்பர் 31ம் திகதிக்கு முன் 2012 வாக்காளர் இடாப்பு வெளியிடப்படும்...

2012ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு டிசம்பர் 31ம் திகதிக்கு முன் வெளியிடப்படும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் ஒவ்வொரு வருடத்திற்குமான வாக்காளர் இடாப்பு புதிய வருடத்தின் மே மாதத்திலேயே வெளியிடப்பட்டு வந்ததாகவும் இம்முறை உரிய வருடத்திற்குள்ளேயே வெளியிடப்படும் எனவும் செயலகம் கூறியுள்ளது. 2012 வாக்காளர் இடாப்பு தயாரிப்புக்கான முதல் கட்டப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் இது குறித்து ஏதாவது மேன்முறையீடு செய்யப்படவிருந்தால் எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னர் மேற்கொள்ள முடியும் எனவும் செயலகம் தெரிவித்துள்ளது.

2012ம் ஆண்டு வாக்காளர் அட்டையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட சேர்த்துக் கொள்ளப்படாத பெயர் விபரங்கள் ஒக்டோபர் 4ம் திகதி தொடக்கம் கிராம சேவகர் அலுவலகம், பிரதேச செயலகம், தபால் அலுவலகம், மாவட்ட செயலாளர் அலுவலகம் என்பவற்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அதனை பார்வையிட்டு மேன்முறையீடுகள் இருப்பின் 31ம் திகதிக்கு முன்னர் முன்வைக்குமாறு தேர்தல்கள் செயலகம் வேண்டியுள்ளது.

நவம்பர் மாதத்தில் அந்த மேன்முறையீடுகளை பரிசீலித்து டிசம்பர் 31ம் திகதிக்கு முன்னர் 2012 வாக்காளர் இடாப்பை வெளியிட எண்ணியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments