மாகாண சபை உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகளாக பணியாற்ற ஜனாதிபதி அறிவுரை

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று இவ்வாறு தெரிவித்தார்.
வட மத்திய, சப்ரகமுவ மாகாண சபைகளுக்குத் தெரிவான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்
வேட்பாளர்களுடன் அலரி மாளிகையில் நடத்திய சந்திப்பில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
பெற்ற வெற்றியால் மமதை கொள்ளாமல், பொறுப்புக்களை உணர்ந்து செயற்பட வேண்டும்.
மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற சகலரும் ஒன்று சேர்ந்து கைகோர்த்து செயற்பட
வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இத்தேர்தலில் பெற்ற அமோக வெற்றியை வாழ்த்துவதற்காக
இந்த வைபவம் நடத்தப்பட்டது.
மாகாண சபைகளுக்கு நாட்டின் சார்பில் பெரும் பொறுப்பு உண்டு.
குறைந்த வசதிகள் கொண்ட மாகாணங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வை நீங்கள் கண்களால்
நேரில் கண்டீர்கள். நாட்டின் அபிவிருத்தி தொடர்பாக அவர்கள் பெரும் எதிர்பார்ப்புடன்
உள்ளனர்.
அந்த எதிர்பார்ப்புக்களை நிறை வேற்றுவது சகல அரசியல் பிரதிநிதிகளின் பொறுப்பாகும்.
சகலரும் சகோதரத்துவமாகவும், ஒன்றுபட்டும் செயற்படுவதன் மூலமே எதிர்வரும் காலங்களில்
எழக்கூடிய சகல சவால்களையும் வெற்றிகரமாக எதிர்கொள்ளலாம்.
மூன்று தசாப்த பயங்கரவாதத்தை முறியடித்து பெற்ற வெற்றியை பெருவெற்றியாக்க
வேண்டுமானால் மக்களின் எதிர்பார்ப்புக்களை இயன்ற அளவில் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு ஜனாதிபதி கூறினார்.
சிரேஷ்ட அமைச்சர் ரத்னசிரி விக்ரமநாயக்க, அமைச்சர்களான நிமல் சிறி பால டி சில்வா,
பசில் ராஜபக்ஷ உட்பட பல அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
0 Comments