Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

இஸ்லாம் மத இழிவு திரைப்பட தயாரிப்பாளர் கைதாகி சிறையில் அடைப்பு...

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் திரைப்படம் தயாரித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். உலக அ,ளவில் முஸ்லிம்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய ´இன்னஸன் ஒப் முஸ்லிம்ஸ்´ என்ற திரைப்பட தயாரிப்பாளரே நேற்று அமெரிக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட நகௌலா பஸ்ஸெல்லி நகௌலா என்ற 55 வயது தயாரிப்பாளர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

குறித்த சந்தேகநபருக்கு பிணை வழங்க அமெரிக்க சமஷ்டி நீதிமன்ற நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

சந்தேகநபருக்கு எதிராக உலக அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் பிணை வழங்க முடியாதென தெரிவித்த நீதிபதி, அவரை சிறையில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments