உலகின்
பல நாடுகளில் அப்பிள் உற்பத்தி செய்யப்படுகிறது. அப்பிள் உற்பத்தி
செய்யப்படும் நாடுகளை விட அப்பிளை நுகரும் நாடுகளின் எண்ணிக்கை அதிகம்.
இலங்கை
மக்களும் அப்பிளை விரும்பி உண்பது நாம் அறிந்ததே. ஆனால் இலங்கையில்
அப்பிள் உற்பத்தி செய்யப்படுகின்றது என்பதை எத்தனை பேர் அறிவார்கள ?
நுவரெலியா, கந்தப்பொல, கல்பாலம பிரதேசத்தில் துஷார என்பவர் வெற்றிகரமாக அப்பிள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்.
இவரைப் போல் வெற்றிகரமாக இலங்கையில் அப்பிள் உற்பத்தியை மேற்கொள்ள முடியாதா?
