Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

ஸாகிர் நாயிக்கின் இஸ்லாமிய பிரச்சாரத்தின்போது மல்வானையில் பிரச்சினை

Zakir-Naikஉலகளாவிய ரீதியில் மதங்களுக்கிடையில் ஒப்பீட்டு இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்து வருகின்ற இஸ்லாமிய அறஞர் ஸாகிர் நாயிக் மல்வானைக்கு விஜயம் செய்தபோது அங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸாகிர் நாய்க் மல்வானை அல்-முபாறக் தேசிய கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கம் அப்பாடசாலையின் லாபிர் மண்டபத்தில் சொற்பொழிவு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
அங்கு ஸாகிர் நாயிக் உரையாற்றிக் கொண்டிருக்கின்றபோது கூட்டத்திலிருந்த ஒருவர் அர்த்தமற்ற, குறித்த விடயமற்ற சில கேள்விகளைக் கேட்டதன் விளைவாகவே அங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.
இஸ்லாமிய அறிஞர் ஸாகிர் நாயிக் வேறு ஒரு இடத்திற்கு பயணம் மேறகொள்கின்றபோது அவர்களின் அழைப்பை ஏற்று அங்கு சுமார் 10 நிமிடம் உரை ஒன்றை நிகழ்த்துவதற்கு சம்மதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments