Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

இஸ்லாமிய அறிஞர் ஸாகிர் நாயிக், அமைச்சர் ஹக்கீம் சந்திப்பு

நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் பற்றி கீழ்த்தரமாக அமெரிக்காவில் தயாரித்து வெளியிடப்பட்டுள்ள திரைப்படம் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் வெளியிடப்படும் கேலிச்சித்திரங்கள் என்பன பற்றி சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியுமென்றும், வெளிநாட்டு தூதுவராலயங்கள் ஊடாக பலத்த கண்டனங்களைத் தெரிவிக்க முடியும் என்றும், குறிப்பாக மத்திய கிழக்கு, வளைகுடா நாடுகள்
சம்மந்தப்பட்ட மேற்குலக நாடுகளின் உற்பத்திப்பொருட்களுக்கெதிராக தத்தமது நாடுகளில் தடைவிதிக்க முடியும் என்றும் டாக்டர் ஸாகிர் நாயிக், இலங்கையின் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் தெரிவித்தார்.

உலக புகழ் பெற்ற இஸ்லாமிய அறிஞர் டாக்டர் ஸாகிர் நாயிக், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீமை அவரது இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை (21) மாலை சந்தித்து நீண்ட நேரம் சமகால இஸ்லாமிய உலகம் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சனைகள் பற்றி கலந்துரையாடியபோதே அவர் இதனைக் கூறினார்.
 இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களும், கட்சியின் கிழக்குமாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களும், கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர், அத்துடன் சவூதி அரேபியா, மிற்சுபிசி கம்பனியின் உரிமையாளரான தனவந்தர் அப்துல் ரப் அல்-இஷாயி, ஜனாதிபதியின் இணைப்பாளர் காதர் மசூர் மெளலானாவும் அமைச்சரின் இல்லத்தில் அப்பொழுது பிரசன்னமாகி இருந்தனர்.

 இந்திய, இலங்கை முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டையும், சன்மார்க்க, சமூக நலன்களையும் மைய்யப்படுத்தியதாக இக்கலந்துரையாடல் அமைந்திருந்தது. இலங்கையில் 800 கு மேற்பட்ட அரசாங்க முஸ்லீம் பாடசாலைகள் இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். தென் இந்தியாவின் கரையோர பிரதேச்ங்களில் இருந்து இலங்கைக்கு வந்த இஸ்லாமிய அறிஞர்கள் இங்கு அரபு மொழி வளர்சிக்காக பெரும் பங்களிப்பு செய்ததோடு, நாட்டின் பல பகுதிகளிலும் பள்ளிவாசல்களையும் நிறுவ உதயதாகவும் அமைச்சர் கூறினார்.
தமது நிறுவனத்தினூடாக மும்பாயிலும் ஏனைய இடங்களிலும் நடாத்தப்படும் கல்வி நிறுவனங்களில் கற்றுத்தேறும் மாணவர்கள் மதீனா பல்கலைகழகம், உம்முல் குரா கல்வி நிறுவனம் போன்ற வற்றில் உயர் கல்வி பெற்று வருவது பற்றியும், சமய பிரசாரத்தில் அவர்கள் அயராது ஈடுபட்டு பணியாற்றுவது பற்றியும் டாக்டர் ஸாகிர் நாயிக் கூறினார்.
இலங்கை அரசியலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செலுத்திவரும் செல்வாக்கு பற்றியும், இலங்கையில் தஃவா பணியில் தப்லீக் ஜமாஅத், ஜமாஅதே இஸ்லாமி, தெளஹீத் ஜமாஅத் போன்ற அமைப்புக்கள் ஆற்றிவரும் பணிகள் பற்றியும் அமைச்சர் ஹக்கீம் பெரிதும் சிலாகித்துக் கூறினார்.

Post a Comment

0 Comments