Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

நாட்டின் கல்வித்துறையை அரசாங்கம் திட்டமிட்டு சீர்குலைக்கிறது – சஜித் பிரேமதாச

 

Sajith-Premadasaநாட்டின் கல்வித்துறையை அரசாங்கம் திட்டமிட்டு சீர்குலைத்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில், 'உரிய கல்வி அபிவிருத்தியின்றி நாட்டை முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்ல முடியாது, கல்வி மிக வலுவான ஆயுதம்' என ஆபிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலா தெரிவித்துள்ளதாக சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், தற்போதைய அரசாங்கம் கல்வித்துறைக்கு உரிய மதிப்பு அளிக்கப்படாத காரணத்தினால் 27.5 வீதமானவர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சி அரசியல்வாதிகளும், அவர்களின் ஆதரவாளர்களும் மக்களின் வரிப்பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்ற நிலையில் ஏன் கல்வித்துறைக்கு மொத்தத் தேசிய உற்பத்தியில் 6 வீதத்தை ஒதுக்க முடியாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Post a Comment

0 Comments