Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

22 மாடுகளை ஏற்றிச் சென்ற ஐவர் கஹவத்தையில் கைது..

சித்திரவதை செய்யும் வகையில் 22 மாடுகளை ஏற்றிச் சென்ற ஐந்து சந்தேகநபர்கள் கஹவத்தை - எல்லேவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படை உடவலவ முகாம் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களால் கொண்டு செல்லப்பட்ட மாடுகளின் பெறுமதி 7 லட்சம் என
தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்கென கஹவத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments