Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

அடக்கம் செய்ய இன்னும் பல இடங்கள், அடையாளம் காணப்பட வேண்டுமென்பதை எதிர்பார்க்கின்றோம் - ஜம்இய்யத்துல் உலமா


கொவிட்-19 தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு மரணித்தவர்களின் ஜனாஸாக்களை நிர்ணயிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய அடக்கம் செய்வதற்கு வழிவகுத்தமையிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச மக்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இலங்கை இராணுவம், பொலிஸ், சுகாதார அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட அரச அதிகாரிகள் உட்பட இதற்கு பங்களிப்புச் செய்த அனைவரும் எமது நன்றிக்குரியவர்கள்.

சம்பந்தப்பட்ட பகுதிகளிலுள்ள மக்களின் உணர்வுகளை மதித்து, கொவிட் -19 தாக்கத்தினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய பொருத்தமான இன்னும் பல இடங்களும் உரிய அதிகாரிகளால் அடையாளம் காணப்பட வேண்டும் என்பதை எதிர்பார்க்கின்றோம். இது கொவிட்-19 தாக்கத்தினால் இறந்து அடக்கம் செய்ய விரும்பும் பிற மதங்களைச் சேர்ந்தவர்களுக்கும் மரணித்தவர்களை அடக்கம் செய்வதற்கான நிர்ணயிக்கப்பட்ட இடங்களைப் பெற உதவியாக இருக்கும்.


அஷ்-ஷைக் எம்.ஜே. அப்துல் ஹாலிக்

பதில் தலைவர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


-jm-pst-

Post a Comment

0 Comments