இலங்கையில் முதலாவது கொரோனா ஜனாஸா உரிய சுகாதார பாதுகாப்புகளுடன், அரசாங்க வழிகாட்டலுக்கமைய 05)இன்றைய தினம் ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஓட்டமாவடி,மஜ்மா நகரில் இன்றைய ஜூம்ஆ தொழுகையின் பின்னர் கொரோனா தொற்றினால் மரணமடைந்த இரண்டு பேர்களின் ஜனாஸாக்கள் முதல்முறையா அடக்கம் செய்யவதற்காக உயர்பாதுகாப்புடன் எடுத்துவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு ஓட்டமாவடியில் 3 ஏக்கர் நிலத்தை நியூ ஸ்டார் விளையாட்டு கழகத்தின் முன்னாள் தலைவர் எம்.எப்.எம் ஜெளபர அவரகள் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவருக்கு இவ் உலக வாழ்விலும் மறு உலக வாழ்விலும் இறைவனின் அருள் கிடைக்க வேண்டும் என பிரார்த்தித்துக் கொள்கிறோம்!..
0 Comments