Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

முஸ்லிம் - கிறிஸ்தவர்களுக்கும் இடையில் மோதலை தூண்டுவதற்கு அரசாங்கம் முயல்கின்றது - ஹரீன்


கொரோனாவைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவை தெரிவு செய்ததன் மூலம் அரசாங்கம் முஸ்லிம்களிற்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையில் மோதலை உருவாக்க முயல்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன்பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

கத்தோலிக்கர்கள் அதிகளவில் வாழும் தீவில் உடல்களை அடக்கம் செய்ய முயல்வதன் மூலம் முஸ்லிம்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையில் குரோதத்தையும் வெறுப்புணர்வையும் விதைக்க அரசாங்கம் முயல்கின்றது என ஹரீன்பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து தெரிவித்துள்ள ஹரீன்பெர்ணான்டோ முழுமையற்ற அறிக்கையை தான் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

-jvn-pst-

Post a Comment

0 Comments