Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

பிரதமரின் தீர்மானத்துக்கு பாக்கிஸ்தான் பிரதமர் நன்றி தெரிவிப்பு


கோவிட்-19 தொற்றுக்கு இலக்காகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்வது தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ச எடுத்துள்ள தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.

கோவிட் - 19 காரணமாக உயிரிழக்கும் அனைவரையும் இலங்கை அரசாங்கம் இதுவரை காலமும் தகனம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு வருகின்ற நிலையில் கோவிட் - 19 காரணமாக மரணிப்போரை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதிப்பதாக பிரதமர் மகிந்த ராபஜக்ச இன்றைய தினம் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பிற்கு நன்றி பாராட்டுவதாகப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இம்ரான்கான் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments