Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

ஜனாஸா விவகாரத்தில் சமூகத்திற்கு வெற்றி கிடைக்கும்


கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் விவகாரத்தில் சமூகத்திற்கு வெற்றி கிடைக்குமெனவும் இறைவனின் துணையினால் நல்ல முடிவு விரைவில் கிடைக்குமெனவும் தான் உறுதியாக நம்புவதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் விவகாரத்தில் பிரதமர் பாராளுமன்றத்தில் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என கேட்டதற்கு அவர் நேற்றுமுன்தினம் (17) இந்தக் கருத்தை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

வெட்டிப்பேச்சுக்கள் மூலம் எதுவுமே நடைபெறப்போவதில்லை. விமர்சனங்களுக்கும் தூற்றல்களுக்கும் பயந்து வெறுப்பு அரசியலை வெறுத்தொதுக்கும் தனது பணியை நிறுத்தப் போவதுமில்லை என அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்துடன் முஸ்லிம்களின் விவகாரங்களை எவ்வாறு கையாளவேண்டுமென அரசியல் சூட்சுமம் தெரியாதவர்களே பொதுவெளியில் வீண் குழப்பங்களை உருவாக்குகின்றனர்.

எம்மைப் பொறுத்தவரையில் அரசியல் ரீதியான நகர்வுகளை மேற்கொண்டு இந்த விடயத்தில் முழு மூச்சாக ஈடுபட்டு வருகிறோம்.

-mn-pst-

Post a Comment

0 Comments