பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் ஸ்ரீலங்காவிற்கா விஜயம் இந்திய அரசாங்கத்திற்கு எதிரானதாக அமைந்து விடக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
தற்பொழுது ஸ்ரீலங்காவிற்கு இந்தியாவிற்கு எதிரான ஒரு நிலைப்பாடு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் கொழும்பு துறைமுகம் தொடர்பான ஏற்பட்டுள்ள முறுகல் நிலையாகும்.
ஆரம்பத்தில் இந்திய அரசாங்கத்திற்கு வழங்குவதற்கு தயாராக இருந்த நிலையில் ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட பல்வேறு தரப்பினரின் இந்திய எதிர்ப்பு போராட்டம் காரணமாக இந்த தீர்மானம் கைவிடப்பட்டுள்ளது.
இதன்காரணமாக தற்பொழுது இந்தியா தொடர்பாக இலங்கையில் பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு நிலையில் பாகிஸ்தான் பிரதமரின் ஸ்ரீலங்கா விஜயம் குறித்து பல கேள்விகள் எழுகின்றன.
மேலும் பாகிஸ்தான் பிரதமரின் ஸ்ரீலங்கா விஜயமானது இந்தியாவிற்கு எதிரானதாக அமைந்து விடக்கூடாது. ஏனெனில் இந்தியா என்பது எமது குடும்பத்தில் ஒருவர் போல. பல்வேறு இக்கட்டான சந்தரப்பங்களிலும் இந்தியாவின் உதவி எமக்கு கிடைத்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
-ibc-nk-
0 Comments