இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 400 ஐ தாண்டியது.இந்நிலையில், இறுதியாக 6 கொரோனா மரணங்கள் பதிவாகிய நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 403 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 76 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று திங்கட்கிழமை இரவு 10 மணி வரை 774 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 76428 ஆக உயர்வடைந்துள்ளது.
0 Comments