பதவியேற்ற முதல் நாளிலேயே, முன்னாள் அதிபர்
டொனால்ட் ட்ரம்ப் எடுத்த சில கொள்கை முடிவுகளை அதிரடியாக மாற்றியுள்ளார்.ஜோ பைடன் ஒரு தூங்கும் பேர்வழி எனவும், அதிபர் பதவியை நிர்வகிப்பதற்கான ஆற்றல் அவரிடம் இல்லை என்றும் ட்ரம்ப் தனது பிரசாரத்தின் போது விமர்சனம் செய்தார்.
ஆனால், அவரது கருத்தை தகர்த்தெறிந்த பைடன், 78 வயதிலும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.
பதவியேற்ற இரண்டு நாட்களில் எந்த அதிபரும் செய்யாத அளவில் அதிகபட்சமாக 17 உத்தரவுகளில் கையெழுத்திட்டு ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
ட்ரம்ப் சுமார் 2 மாதங்களில் செயற்படுத்திய திட்டங்களை பைடன் இரண்டே நாட்களில் முடித்துள்ளார்.
இதே வேகத்தில் அவர் பயணித்தால், முன்னைய அதிபர்களின் முதல் 100 நாட்கள் சாதனைகளை குறைந்த நாட்களிலேயே முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை பைடனின் முதல் 100 நாட்களுக்கான செயற்திட்டங்களை இறுதி செய்யும் பணியில் அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments