Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள மிக வேகமாக பரவக்கூடிய கொரோனா வைரஸ் தொடர்பில்...

மிக வேகமாக பரவக்கூடிய மற்றொரு வகை கொரோனா இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக, நீர்ப்பீடனம் மற்றும் மூலக்கூற்று உயிரியல் பிரிவின் பணிப்பாளர், வைத்திய கலாநிதி சந்திம ஜீவந்தர இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் (SARS-CoV-2 B1258), ஏற்கனவே இலங்கையில் அடையாளம் காணப்பட்ட (B1411) கொரோனா வகையிலும் பார்க்க வேறுபட்டது எனவும், இதன் பரவல் வேகம் மிக அதிகமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த இரு வாரங்களுக்குள் அடையாளம் காணப்பட்ட நோயாளர்களிடையே இப்புதிய வகை வைரஸ் அடையாளம் காணப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சு மற்றும் தொற்றுநோயியல் பிரிவு ஆகியவற்றின் வேண்டுகோளுக்கிணங்க, கொவிட்-19 மரபணு மாற்றங்கள் தொடர்பில் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வின் அடிப்படையில் இது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறித்த வைரஸ் வகை பிரித்தானியா, டென்மார்க், ஜேர்மனி, சுவீடன், ஐஸ்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இவ்வகையான வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஆயினும் பொதுமக்கள் இது குறித்த அச்சம் கொள்ளத் தேவையில்லை எனத் தெரிவித்த அவர், தடுப்பூசி நோயெதிர்ப்பில் பாதிப்பை ஏற்படுத்தாது என தகவல்கள் தெரிவிப்பதாக சுட்டிக்காட்டினார்.

Post a Comment

0 Comments