Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

பேக்கரி உணவுப்பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்!

பாண் உட்பட பேக்கரி உற்பத்தி பொருட்கள் அனைத்தினதும் விலை அடுத்த மாதம் முதல் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்த்தன தெரிவித்தார்.

அத்துடன் அரசாங்கம் வரி குறைப்பை மேற்கொண்டால் மாத்திரமே விலை அதிகரிப்பை தவிர்க்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

பேக்கரி உற்பத்தி பொருட்கள் ஒரு சில கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக விற்பனை செய்யப்படுவது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments