தனது முடிவு குறித்து இம்மாத ஆரம்பத்தில் மும்பை முகாமைத்துவத்துக்கு மலிங்க அறிவித்து, எதிர்வரும் பருவகாலத்தில் விளையாட முடியாது எனக் கூறிய நிலையில், அவர் மும்பைக் குழாமில் தக்கவைக்கப்படவில்லை.
ஐ.பி.எல்லின் இரண்டாவது பருவகாலத்திலிருந்து மும்பையில் இருக்கும் மலிங்க, 2018, 2020 பருவகாலங்களை மாத்திரமே தவறவிட்டிருந்தார். 2018ஆம் ஆண்டு பந்துவீச்சு ஆலோசகராக செயற்பட்ட பின்னர் 2019ஆம் ஆண்டு மும்பையுடன் நான்காவது சம்பியன் பட்டத்தை வென்றிருந்தார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக கடந்தாண்டு பருவகாலத்தை தவறவிட்டிருந்த மலிங்க, ஐ.பி.எல்லில் அதிக விக்கெட்டுகளாக 122 போட்டிகளில் 170 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.
மும்பை தவிர, கரீபியன் பிறீமியர் லீக்கின் ஜமைக்கா தலாவாஸ், கயனா அமெஸொன் வொரியர்ஸ், பங்களாதேஷ் பிறீமியர் லீக்கின் குலுனா டைகர்ஸ், ரங்கபூர் றைடர்ஸ், பிக் பாஷின் மெல்பேர்ண் ஸ்டார்ஸ் உள்ளிட்டவற்றுக்காக மலிங்க விளையாடியுள்ளார்.
அந்தவகையில், மொத்தமாக இருபதுக்கு – 20 போட்டிகளில் 295 போட்டிகளில் 390 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
-tmr-
0 Comments