Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

கொரோனாவினால் இறக்கும் உடல்களை அடக்கம் செய்வதால் வைரஸ் நீரில் பரவாது - உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி மலிக் பீரிஸ்

கொரோனா வைரஸ்ஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் உடல்களை அடக்கம் செய்வதால் வைரஸ் நிலக் கீழ் நீரைப் பாதிக்கும் என்பதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை என உலகப் புகழ்பெற்ற முதல் தர வைரஸ் விஞ்ஞானம் தொடர்பான நிபுணர்களில் ஒருவர் கூறுகின்றார்.

“முதலாவது விடயம் என்னவென்றால், வைரஸ் ஒன்று வளர்ச்சி (Multiply) அடைவது உயிருள்ள கலங்களில் ஆகும்” என பேராசிரியர் மலிக் பீரிஸ் தனது விளக்கத்தை ஆரம்பித்தார்.

“கலங்கள் மரணித்தால் வைரஸ் வளர்ச்சியடைவதற்கு சாத்தியமில்லை. அதன் காரண மாக வைரஸ் பரவுவதும் தடுக்கப்படுகின்றது.

“இதன் காரணமாக கொரோனா நோயாளி ஒருவர் மரணித்ததன் பின்னர் அவரது உடலில் உள்ள வைரஸின் ஆயுட்காலம் மிகவும் குறுகியது” எனவும் இலங்கை விஞ்ஞானி குறிப்பிடுகின்றார்.

“இதனால் 6 அடி நிலத்தின் கீழ் உடலிலிருந்து நிலத்திற்கு வைரஸ் வந்து அது நீரில் கலந்து, அதனால் வைரஸ் பரவும் என்று எனக்குத் தெரியாது. “நோயியல் நிபுணரான (Pathologist) பேராசிரியர் மலிக் பீரிஸ், ஹொங்கொங் பல்கலைக்கழத்தின் வைரஸ் விஞ்ஞானம் தொடர்பான பிரிவின் பிரதானி ஆவார்.

கொரோனா எதனால் பரவுகின்றது?

இரண்டாவது காரணம், ஒரு நோயாளியிடம் நோயின் அறிகுறிகள் தோன்றுவதற்கு சில தினங்களுக்குப் முன்னரே அவரிடமிருந்து நோய் பரவுவதற்கு ஆரம்பிக்கின்றது. அது வரை நோயாளியின் உடம்பில் எந்தவிதமான அறிகுறிகளும் காட்டப்படுவதில்லை. இதன் பிறகு நோய் அறிகுறிகள் குறைந்து நான்கு ஐந்து நாட்களில்தான் இந்த வைரஸ் அதிகம் பரவும் காலப்பகுதியாகும்.

யாராவது வைரஸினால் இறப்பதற்கு முன்னர், நோய் அறிகுறிகள் குறைந்து, வைத்தியசாலைக்கு அனுமதித்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதித்து… என்று, இவை எல்லாவற்றிற்கு பல நாட்கள் செல்கின்றது. இந்தக் காலப்பிரிவினுள் குறித்த நோயாளியிடமிருந்து வைரஸ் பரவு வதற்கான வாய்ப்பும் மிகவும் குறைகின்றது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சில நாட்களின் பின்னர்கூட PCR பரிசோதனை Positive ஆகக் காட்டலாம். ஆனால் இது குறித்த நோயாளியிடமிருந்து வைரஸ் பரவுவதற்கான சாத்தியம் அதிகம் என்பதல்ல. PCR Positive ஆக இருந்தாலும் 8 நாட்கள் ஆகும்போது இன்னொருவருக்கு வைரஸ் பரவு வதற்கான சாத்தியம் மிகவும் குறைகின்றது. இவற்றை வைத்துப் பார்க்கும்போது ஒருவர் கொவிட் காரணமாக மரணிப்பதற்கு பெரும் பாலும் இரண்டு வாரம் அல்லது மூன்று வாரங் கள் ஆகின்றது. இச்சந்தர்ப்பத்தில் நோயாளியின் வைரஸ் பரவுவதற்கான சாத்தியம் மிகவுமே குறைவாகும் என மலிக் பீரிஸ் குறிப்பிட்டார்.

யார் இந்த பேராசிரியர் மலிக் பீரிஸ் ?

பேராசிரியர் மலிக் பீரிஸ், 2003ம் ஆண்டு பரவிய சார்ஸ் வைரஸினை கண்டுபிடிப்பதற்கும் அதனை கட்டுப்படுத்துவற்கும் முதன்மையாகக் கடமையாற்றிய ஒரு இலங்கை விஞ்ஞானியாவார். 2015ம் ஆண்டு மத்திய கிழக்கு நாடுகளில் பரவிய மர்ஸ் வைரஸ் தொடர்பான ஆய்வுகளுக்கும் இவர் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.

உலகின் பிரசித்தி பெற்ற விஞ்ஞான சஞ்சிகை களில் 600இற்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரை களை எழுதியுள்ள இவர், உலகப் புகழ் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ள பிரத்தானியாவின் The Royal Society இன் அங்கத்தவராவார்.

பேராசிரியர் மலிக் பீரிஸ் மற்றும் அவரது குழுவினர் புதிய கொரோனா வைரஸை அடையாளப்படுத்தல் மற்றும் அதனை கட்டுப்படுத்துவதற்கான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர்.

உடலை அடக்கம் செய்வது எவ்வாறு?

இறந்த உடல் ஒன்றை அடக்கம் செய்வது ஆறு அடி ஆழத்திலாகும். இலங்கை அரசாங்கம் துறைசார்ந்தோரின் கருத்தைப் பெற்று கொரோனாவினால் மரணிக்கும் அனைவரையும் எரிப்பதற்கு தீர்மானித்துள்ளது. இதற்கு எந்தவிதமான விஞ்ஞான அடிப்படைகளும் இல்லை எனவும், அடக்கம் செய்யப்பட்ட உடல் ஒன்றிலிருந்து வைரஸ் மண்ணிலிருந்து நீரை அடைவதென்பது சாத்திய மில்லாத விடயமாகும்.

வைரஸ் மண்ணைத் தாண்டிச் செல்லும்போது, இருக்கின்ற வைரஸ் கூட அழிந்து விடும் என்று மேலும் அவர் தெரிவித்தார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டலின்படி ஒரு உடலை அடக்கம் செய்வதற்கு முன்னர் வைரஸ் ஒழிப்பு (disinfectant) செய்யப்படுகின்றது. பின்னர் உடல் பொலித்தீன் பைகளில் உடல் இடப்பட்டே அடக்கம் செய்யப்படுகின்றது எனக் குறிப்பிட்ட அவர், வைரஸ் உடலில் இருந்தாலும் அது வைரஸ் ஒழிப்பு காரணமாக (disinfectant) அழிவடைகின்றது எனவும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments