Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

கொரோனா நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான இயற்க்கை மருத்துவ அறிவுரையை வழங்குகிறார் - எம்.தீபன்

கொரோனா வைரஸ் தொற்று நோய்  அறிகுறிகளான தும்மல் போதல்,நாசித்துவாரத்தின் மூலம் நீர் வடிதல்,தொண்டை நோவுடன் தொண்டை அலர்ச்சி,இருமல் என்பன காணப்படும் ஒருவர்  எவ்வாறு அந்த நோயிலிருந்து இயற்க்கை மருத்துவம் மூலம் காத்துக்கொள்வது?

இது தொடர்பா கண்டி சமூகஆர்வலரும்,உமா பவுண்டேஷன் தலைவருமான எம்.தீபன் அவர்கள் இலகுவான மூலிகை மருந்துகளும் அவற்றினை பிரயோகிக்கும் முறைகளுடன் கூடிய ஒரு இயற்கை மருத்துவ அறிவுரையை நமக்கு வழங்கியிருந்தார்.

முதலாவதாக சுடு நீராவி பிடித்தல் 

+++++++++++++++

இது தும்மல் மற்றும் நாசித்துவாரத்தின் மூலம் நீர் வடிதல் உடையவர்களுக்கு மிகவும் சிறந்தது . ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று விடுத்தமாவது நீராவி பிடித்தல் மிகவும் நல்லது . 

1-முதல் நேரமாக காலை எழுந்தவுடன் 5 நிமிடங்கள்.

2-இரண்டாவது நேரமாக பகல் 1 மணியளவில் 5 நிமிடங்கள்.

3-மூன்றாவது நேரமாக இரவு நித்திரைக்கு செல்ல முன்னர் 5 நிமிடங்கள்.

இச் செயற்பாட்டின் மூலம் நாசியின் உட்பகுதியில் காணப்படும் வைரஸ் கிருமிகளை அழிக்கக் கூடியதாக உள்ளது. 

2 பருகக் கூடிய அதிகளவு சூட்டுடன் சுடுநீர் பருகுதல் 

+++++++++++++++

இது தொண்டை நோவு , தொண்டை அலர்ச்சி , இருமல் உடையவர்களுக்கு மிகவும் சிறந்தது.ஒரு நாளைக்கு குறைந்தது 5 தடவைகளாவது 200 ml அளவில் சுடுநீர் பருகுவது மிகவும் நல்லது.இச் செயற்பாட்டின் மூலம் தொண்டையில் காணப்படும் வைரஸ் கிருமிகளை அழிக்க வல்லது.

3 இஞ்சி கொத்தமல்லி கசாயம் பருகுதல் 

+++++++++++++++

இது தேனீர் பருகும் வேலையில் 1 தேனீர் கப் அளவில் ( 150 ml ) , இஞ்சி , கொத்தமல்லி கசாயம் ஒன்றை தயாரித்து ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு தடவைகளாவது பருகுதல் வேண்டும்.

4 தூய தேன் பருகுதல் 

+++++++++++++++

தேனில் அதிகளவில் "எண்டி ஒக்சிடன்ட்" ( Antioxidunts ) காணப்படுவதினாலும் , மருத்துவக் குணமுடைய பல இரசாயனப் பதார்த்தங்கள் காணப்படுவதினாலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியதும் நோயிக்காரணிகளுக்கு எதிராக தொழிற்படக்கூடியதுமாக இத் தேன் செயற்படுகின்றது . தூய தேனானது 4 தேக்கரண்டி வீதம் ( 20 ml ) ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் பருகுதல் வேண்டும் . 

* முதலாவது காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில். 

* இரண்டாவதாக இரவு படுக்கைக்கு செல்ல முன்னர்.

இவைகளை முறைப்படி செய்வதன் மூலம் வைரஸ் கிருமிகளின் நோய்த்தாங்களில் இருந்து எம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும் என உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்!

-Fastnews1stமுதல்வேகச்செய்தி-

Post a Comment

0 Comments