இந்த ஏற்றுமதி வர்த்தக பழவகை உற்பத்தி திட்டத்தில் 2000 குடும்பங்களுக்காக 700 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு 5 இலட்சம் ரூபா வீதம் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு நிதி உதவி வழங்கப்படவுள்ளதாக கமத்தொழில் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உற்பத்தி பொருட்களை நேரடியாக ஏற்றுமதி சந்தைக்காக உற்பத்தி செய்வதாகும். அறுவடையில் ஆக கூடிய மற்றும் வெளிநாட்டு சந்தையின் கோரிக்கைக்கு அமைவாக உற்பத்தியை வழங்ககூடிய பழ கன்றுகள், விதைகள், தொழில்நுட்பம், உயர் தரத்திலான உற்பத்திக்கான தொழில்நுட்ப அறிவு மற்றும் ஆலோசனைகளும் இதன் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
அறுவடையை வெளிநாட்டு சந்தைக்கு ஏற்ற வகையில் பெறுமதியை சேர்ப்பதற்காக அனைத்து துறைகளையும் கொண்ட (State Of The Art) தயாரிப்பு மத்திய நிலையம் (Processing Centers) முதலான நான்கும் இந்த ஏற்றுமதிக்காக வழங்கப்படவுள்ளது.
வாழை கொய்யா, அன்னாசி, ஆனைக்கொய்யா ஆகிய பழவகை இந்த திட்டத்தின் கீழ் ஏற்றுமதி செய்வதை இலக்காக கொண்டு உற்பத்தி செய்யப்படும்.
இந்த உற்பத்தியாளர்களின் உற்பத்திக்காக வெளிநாட்டு சந்தையை உருவாக்குவதற்கு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை சந்தித்த டோல் நிறுவன பிரதிநிதிகள் அதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளன.
இந்த திட்டதின் கீழ் உற்பத்திகள் மத்திய கிழக்கு சந்தைக்கும், பிலிப்பைன்ஸ் நாட்டுக்கும் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த உற்பத்தி திட்டத்தை இலங்கையில் மேலும் 12 மாவட்டங்களில் விரிவுப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக தற்பொழுது முதல் கட்டமாக கண்டி மாவட்டம் உட்பட 5 மாவட்டங்களில் இதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த பழ உற்பத்தி அடுத்த வருடம் முதல் காலாண்டு பகுதியில் ஏற்றுமதி செய்ய கூடியதாக இருக்கும் என்று விவசாய அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-அரச தகவல் திணைக்களம்-
0 Comments