Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

நாட்டின் பிரதமராக மீண்டும் மஹிந்த ராஜபக்க்ஷ இன்று பதவியேற்றார்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புதிய பிரதமராக நான்காவது முறையாக  மீண்டும் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில்
பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

குறித்த பதவியேற்பு நிகழ்வு அனுராதபுரம் களனி ரஜமஹா விகாரையில் இன்றையதினம் இடம்பெறவுள்ளது.

பதவி ஏற்பு நிகழ்வில் மஹா சங்கத்தினர் உள்ளிட்ட மத குருமார்கள் மற்றும் வௌிநாட்டு இராஜதந்திரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் பிரதமராக பதவியேற்கும் நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும். இதற்கு முன்னர் 2004, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அவர் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ 5,27,364 விருப்பு வாக்குகளை பெற்று, இலங்கை அரசியல் வரலாற்றில் சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments